close
Choose your channels

காதலருடன் 'இந்தியன் 2' நடிகை.. திருமணம் எப்போது? வைரல் வீடியோ..!

Saturday, May 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை தனது காதலருடன் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ ’என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது சிவகார்த்திகேயனின் ’அயலான்’ மற்றும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங்கில் இருக்கும் நிலையில் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் தனது காதலருடன் ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவரது திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அவர் தனது திருமண அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.