close
Choose your channels

'ராகவன் இஸ் பேக்'.. மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம்..!

Saturday, May 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் வரும் ஜூன் மாதம் டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஜோதிகா நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’வேட்டையாடு விளையாடு’. இந்த படம் ரூ.24 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.50 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டிருக்கும். அதிரடி ஆக்சன் மற்றும் திரில்லர் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக வெளிவந்திருக்கும் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படம் டிஜிட்டலில் மெருகூட்டப்பட்ட நிலையில் அவரது ரசிகர்களுக்கு மீண்டும் இந்த படம் ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.