close
Choose your channels

'அரண்மனை 3' படத்தில் இணைந்த உதயநிதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும், விரைவில் வரவுள்ள திருவிழா தேதியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகிய குஷ்பு டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் உதயநிதி இந்த படத்தில் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அரண்மனை 3’திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், மேலும் இந்த திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாட்ட தினத்தில் ரிலீஸாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’அரண்மனை 3’ திரைப்படத்தில் சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.