சன்னிலியோன் நடித்த தமிழ்ப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சன்னி லியோன் நடித்த தமிழ் திரைப்படமான ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’ஓமை கோஸ்ட்’. இந்த படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, ஜிபி முத்து, ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சன்னி லியோன் இந்த படத்தில் ராணி மற்றும் பேய் ஆகிய இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பெரும் பொருட்செலவை படக்குழுவினர் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ‘ஓ மை கோஸ்ட்’ வெளியாகும் அதே டிசம்பர் 30ஆம் தேதி பிரபுசாலமனின் ‘செம்பி’ மற்றும் த்ரிஷாவின் ‘ராங்கி’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டராக முடியாது, நல்லா படிக்கணும்: 'செம்பி' டிரைலர்

 பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான 'செம்பி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'காசே தான் கடவுளடா' பாடல் ரிலீஸ் தேதி இதுவா? அஜித் ரசிகர்கள் ஆர்வம்!

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அஜித்தின் இந்திய அளவிலான சாதனை... அடுத்தது உலக சாதனை தான்!

 நடிகர் அஜித் ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு மிகச் சிறந்த பைக் பிரியர் என்பதும் அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளார் என்பது தெரிந்ததே.

'நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம்': 'கனெக்ட்' படத்தின் பாடல் ரிலீஸ்

லேடி சூப்பர் ஸ்டார் நடித்த 'கனெக்ட்'  திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எதிர்பாராத திடீர் திருப்பம். இந்த வாரம் எவிக்ட் ஆனது இந்த போட்டியாளரா??

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் .