close
Choose your channels

எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டராக முடியாது, நல்லா படிக்கணும்: 'செம்பி' டிரைலர்

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ‘செம்பி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ’மைனா’, ‘கும்கி’, ‘தொடரி’ உள்பட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘செம்பி’. .இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குக் வித் கோமாளி அஸ்வின், கோவை சரளா, தம்பி ராமையா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டு நிமிடத்துக்கு மேலான டிரைலர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. முழுக்க முழுக்க லைப் பகுதிகளில் படமாக்கப்பட்டு உள்ள இந்த படம் இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடங்களில் த்ரில் காட்சிகள் கொண்ட கதையம்சத்துடன் பிரபுசாலமன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.