close
Choose your channels

'காசே தான் கடவுளடா' பாடல் ரிலீஸ் தேதி இதுவா? அஜித் ரசிகர்கள் ஆர்வம்!

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற அனிருத் பாடிய பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு என்பதும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டரில் கூறியிருந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த பாடல் டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பை இன்று அல்லது நாளை போனிகபூர் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos