close
Choose your channels

தனுஷின் பாடலுக்கு செம நடனமாடும் சூப்பர் சிங்கர் மானசி: உடன் ஆடுபவர் யார் தெரியுமா?

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் மானசி, தனது சக சூப்பர் சிங்கர் போட்டியாளருடன் நடனமாடி இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ், ப்ரியா பவானிசங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ’மேகம் இருக்காதா’ என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருப்பார் என்பது தெரிந்ததே. அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த பாடலுக்கு சூப்பர் சிங்கர் மானசி மற்றும் அவருடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா ஆகிய இருவரும் நடனம் ஆடியுள்ளனர்.

தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடனமாடும் அதே ஸ்டெப்பை மானசிகா மற்றும் ஸ்ரீதர் சேனா ஆடும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மேலும் இந்த வீடியோவுக்கு ’பறக்க பறக்க’ வித் அண்ணன்’ என்று கேப்ஷனாக மானசி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.