close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': செம அப்டேட்ட வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

Monday, August 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக இருக்கும் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், ரம்யா கிருஷ்ணன், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.