சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் மாஸ் அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,January 16 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் இந்த படத்தின் கேரள உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கேரளாவில் பிறமொழி படங்களின் சாதனை தொகை என்பது குறிப்பிடத்தக்கது

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

25வது படத்தில் துணிச்சலான கேரக்டரை ஏற்று நடிக்கும் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'சீதக்காதி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள இந்த ஆண்டின் முதல் திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீர் மாயம்

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கார் நாயகன்

24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பு திரைப்படமான படத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் விபரங்கள்

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.