close
Choose your channels

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள இந்த ஆண்டின் முதல் திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவின் போது இந்த படத்தின் பாடல்கள் வெளியாகியது

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்த படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளிவரும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 7C எண்டர்டெயின்மெண்ட் பிரவைட் லிமிடெட் மற்றும் அம்மா நாராயணன் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.