சூர்யாவின் படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா ரசிகர் மன்றம்

  • IndiaGlitz, [Monday,November 14 2016]

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக ஒரு நடிகரின் படத்தை அந்த நடிகரின் ரசிகர் மன்றமே ரிலீஸ் செய்கிறது. ஆம் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர் மன்றமான 'சிங்கம் குரூப் திருச்சூர்' என்ற மன்றத்தினர் இந்த படத்தை சொப்னம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரள மாநிலம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கும் 'எஸ் 3' படக்குழுவினர்களுக்கும் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

வேலைக்கு போவதா? வங்கியில் வரிசையில் நிற்பதா? விஜய்சேதுபதி

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வெளிவந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டபோதிலும்...

ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணையும் பாலிவுட் பிரபல நடிகை

விக்னேஷ் சிவன் படத்தால் சூர்யாவுக்கு ஏற்பட்ட இழப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் 19ஆம் தேதி முதல் அவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' சென்னை வசூல் நிலவரம்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது,

நயன்தாரா படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்கள்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மோகன் ராஜா இயக்கத்தில் ஆர்.டி.ராஜாவின் 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.