பூஜையுடன் தொடங்கியது சூர்யாவின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Sunday,April 07 2019]

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கவுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே '8 தோட்டாக்கள்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சத்யசூர்யா படத்தொகுப்பில் பூர்ணிமா காஸ்ட்யூமில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
 

More News

ஸ்டெர்லைட் நகரத்திற்கு செல்லும் 'உறியடி 2' இயக்குனர்

விஜயகுமார் இயக்கி நடித்த 'உறியடி 2' திரைப்படம் நேற்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

மலேசியாவில் வரலட்சுமி! ஒரு ஆச்சரியமான தகவல்

கடந்த ஆண்டு நடிகை வரலட்சுமி, விஜய் நடித்த 'சர்கார்', தனுஷ் நடித்த 'மாரி 2', விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தவர்

பொறுக்கி தின்னும் அரசியல் கட்சிகள்: பிரபல இயக்குனர் ஆவேசம்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr.லொக்கல் படத்தின் டக்குன்னு பாடல் வரிகள்

அவ நேரா பார்க்கையில் கொஞ்சம் கேரா ஆகுது அவ கேரா சிரிக்கையில் மனம் நூறா நொறுங்குது ஐயோ பாக்காதே என்னை தாக்காதே இதயம் வீக்காக உனக்காக வாழ

பிக்பாஸ் புகழ் தமிழ் நடிகை கர்ப்பம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சுஜா வருணே.