close
Choose your channels

'சூர்யா 44' படப்பிடிப்பு இந்த தீவிலா? கார்த்திக் சுப்புராஜின் மாஸ் பிளான்..!

Tuesday, May 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள், எந்த இடத்தில் படப்பிடிப்பு, எத்தனை நாள் படப்பிடிப்பு நடைபெறும்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44 ’திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக படப்பிடிப்புக்கு செல்ல படக்குழுவின தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற இருப்பதாகவும், 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 2ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறும் என்றும் மே இறுதியில் சூர்யா உட்பட படக்குழுவினர் அந்தமான் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்தமான் படப்பிடிப்பை முடித்தவுடன் ஊட்டி மற்றும் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment