சூர்யாவின் முதல் நேரடி மலையாள திரைப்படம்: இயக்குனர் இவர்தான்!

  • IndiaGlitz, [Tuesday,March 08 2022]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் பிற மொழி நேரடி படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோ.ம் தளபதி விஜய்யின் 66வது படம் நேரடி தெலுங்குப் படம் என்பதும், அதேபோல் தனுஷ் நடிக்கும் ’வாத்தி’ திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படமும் நேரடி தெலுங்கு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் தற்போது நேரடியாக மலையாள படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கேரளாவில் நடந்த புரமோஷன் விழாவில் சூர்யா கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அவர் பேசியபோது, ‘பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஒரு கதையை கூறி இருப்பதாகவும் அந்த படத்தில் எதிர்காலத்தில் தான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவில் சூர்யா நடிப்பில் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகும் நேரடி மலையாளப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தாயும் மகளும்: மகளிர் தினத்தில் நடிகர் சூரியின் க்யூட் வீடியோ வைரல்!

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சர்வதேச மகளிர் தினம்: நயன் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது என்ன தெரியுமா?

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரபல நடிகை வீட்டில் நடந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் பிரபல நடிகையின் வீட்டில் நடந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா கலந்துகொண்ட புகைப்படங்கள்

'பீஸ்ட்' நடிகர் தாக்கியதால் பொதுமக்களில் ஒருவர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பொது மக்களில் ஒருவரை தாக்கியதை அடுத்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னணி நடிகர், நடிகையை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் கைது!

முன்னணி நடிகர் நடிகை நடித்து வரும் படத்தை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டதால் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.