close
Choose your channels

சூர்யாவின் முதல் நேரடி மலையாள திரைப்படம்: இயக்குனர் இவர்தான்!

Tuesday, March 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் பிற மொழி நேரடி படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோ.ம் தளபதி விஜய்யின் 66வது படம் நேரடி தெலுங்குப் படம் என்பதும், அதேபோல் தனுஷ் நடிக்கும் ’வாத்தி’ திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படமும் நேரடி தெலுங்கு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் தற்போது நேரடியாக மலையாள படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கேரளாவில் நடந்த புரமோஷன் விழாவில் சூர்யா கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அவர் பேசியபோது, ‘பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஒரு கதையை கூறி இருப்பதாகவும் அந்த படத்தில் எதிர்காலத்தில் தான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவில் சூர்யா நடிப்பில் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகும் நேரடி மலையாளப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.