close
Choose your channels

இது என்னை பயமுறுத்தவில்லை… 95% மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை கருத்து…!

Monday, July 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா மூலம் பிரபலமாகி பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருக்கும் பிரபல நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் அவர் ரசிகர்களுக்கு சில அன்பான வேண்டுகோளை முன்வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பாக கடந்த 1994 இல் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மிதா சென். பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நுழைந்த இவர் கடந்த 1997 இல் பிரவீன் காந்த் இயக்கத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘ரட்சகன்’ தமிழ் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமானார்.

தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வளர்ந்துவிட்ட இவர் மீண்டும் ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‘ஷக லக பேபி’ பாடலுக்கு அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தனி வரவேற்பை பெற்றிருந்தார். பாலிவுட் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நடிகை சுஷ்மிதா சென் 46 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் இரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் ரத்த தமனிகளில் 95% க்கு அடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் ஆஞ்சியோபிளாஸ்டிக் மற்றும் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நடிகை சுஷ்மிதா நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகக் கூறி ஒரே வாரத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேலும் லேக்மே பேஷன் நிகழ்ச்சியில் தைரியமாக கலந்துகொண்டார்.

அந்த வகையில் கடுமையான பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை சுஷ்மிதா தன்னால் நிறுத்தப்பட்ட ‘ஆர்யா சீசன் 3’ வெப் சீரிஸிலும் தற்போது நடித்து முடித்துள்ளார். மேலும் ‘தாலி’ எனும் மற்றொரு வெப் சீரிஸில் அவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாரடைப்புக்கு பிறகான தனது மனநிலை குறித்து பேசிய அவர், ‘இது ஒரு கட்டம் மற்றும் அது கடந்துவிட்டது. நான் மறுபுறம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டசாலி. இது இப்போது என்னை பயமுறுத்தவில்லை. அதற்குப் பதிலாக நான் இப்போது ஏதோ ஒரு வாக்குறுதியை எதிர்நோக்குகிறேன். நீங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அதிர்ச்சியை பெறும்போது நீங்கள் அதை மதிக்கிறீர்கள். மேலும் கவனமாக இருக்கிறீர்கள்’ என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த 2014 இல் ஆண்டில் அடிசன் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சுஷ்மிதா சென் தற்போது மாரடைப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் உற்சாகமாகக் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அவ்வபோது கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.