close
Choose your channels

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் இணைந்த விஜய்சேதுபதி - நயன்தாரா

Tuesday, September 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது 'களத்தில் சந்திப்போம்' என்ற அதிரடி அரசியல் மற்றும் ஆக்சன் படத்தை தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடித்து வருகின்றனர். என் ராஜசேகர் இயக்கி வரும் இந்த படத்திற்கு இளம் இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு இன்று மாலை வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன் இந்த நிறுவனம் சிரஞ்சீவியின் ‘சயிர நரசிம்ம ரெட்டி’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அமிதாப்பசன், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அமித் திரிவேதி இசையில் ரத்னவேலு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் ராம்சரண் தேஜா தயாரித்து வரும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.