close
Choose your channels

முதல்ல வொர்க்-அவுட் ஆகல, இன்னொரு முறைக்காக வெயிட்டிங்: சிம்பு குறித்து தமன்னா!

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவுடன் நடித்த முதல் படத்தில் செமிஸ்ட்டரி ஒர்க்கவுட் ஆகவில்லை என்றும் அவருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், உதயநிதி என பல நடிகர்களுடன் தமன்னா நடித்துள்ளார் என்பதும் இதில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகி உள்ளன என்பதும் தெரிந்ததே.

ஆனால் சிம்புவுடன் அவர் நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்தது மட்டுமன்றி சிம்பு மற்றும் தமன்னா கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆகவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தமன்னா கூறியபோது ’விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்பட பல நடிகர்களுடன் நான் நடித்த படங்களில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியுள்ளது. ஆனால் சிம்புவுடன் நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் மட்டும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை சிம்புவுடன் நடிக்க காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து சிம்பு, தமன்னா நடிக்கும் திரைப்படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.