close
Choose your channels

தமன்னா - ராஷி கண்ணாவின் செம்ம டான்ஸ்.. 'அரண்மனை 4' சிங்கிள் வீடியோ பாடல்..!

Sunday, April 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று சிங்கிள் பாடலாக தமன்னா, ராஷி கண்ணாவின் செம டான்ஸ் ஆடிய வீடியோ பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்று வெளியாகிய பாடல் தெலுங்கில் இருந்தாலும், தமன்னா ராஷி கண்ணாவின் டான்ஸ்க்காக அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துள்ளலாக இருக்கும் இந்த பாடல் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ளது என்பதும் இந்த பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் குஷ்பு இன்று அறிவித்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார் என்பதும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் பென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.