காவி உடையணிந்து இதையெல்லாம் செய்யலாம், நடிக்க மட்டும் கூடாதா? தீபிகாவுக்கு ஆதரவளித்த தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Thursday,December 15 2022]

நடிகை தீபிகா படுகோனே ’பதான்’ என்ற திரைப்படத்தில் காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் காவி உடை அணிந்து இதையெல்லாம் செய்யலாம் ஆனால் நடிக்க மட்டும் கூடாதா? என தமிழ் நடிகர் ஒருவர் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பாகி உள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ’பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் சில காட்சிகளில் காவி உடை அணிந்து கிளாமராக தீபிகா படுகோனே நடித்திருந்த நிலையில் அந்த காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகியது.

குறிப்பாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இந்த பாடலில் உள்ள காட்சிகளை மாற்றாவிட்டால் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ’காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள். ஆனால் காவி உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த கேள்விக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

More News

மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்: 'இந்தியன் 2' அரிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்!

 உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: குஷ்பு வேண்டுகோள் 

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ரசிகர்களிடம் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வைரமுத்துவை சந்தித்த விஜய் டிவி பிரபலம்.. சின்மயி கமெண்ட் என்ன தெரியுமா?

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்ததாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு பாடகி சின்மயி கொடுத்த கமெண்ட் பெரும் பரபரப்பை

கிளைமாக்ஸ் செம மாஸ்-ஆ இருக்கும்: 'வாரிசு' படம் குறித்து கூறிய பிரபலம்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும் என அந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ்-எச் வினோத் படத்தின் மாஸ் அப்டேட்.. தெறிக்க போகும் கோலிவுட்!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை இயக்கி முடித்துள்ள எச் வினோத் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.