close
Choose your channels

பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியதை அடுத்து இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் நடிகைகளில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர் என்பதும் அவர்களுக்கு விமானப் பயண டிக்கெட், தங்கும் வசதி உணவு உள்பட பல்வேறு இலவச சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமியும் தற்போது மாலத்தீவு சென்று தனது பிறந்தநாளை அங்கு சிறப்பாக கொண்டாடி உள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை வரலட்சுமி தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, யசோதா உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.