மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி: 'துணிவு' படம் குறித்து பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தற்போதைய ஒரு சமுதாய பிரச்சனையை மிகவும் தைரியமாக ஒரு மாஸ் நடிகரை வைத்து கூறியுள்ளதால் இந்த செய்தி அடிமட்ட பொதுமக்கள் வரை சென்றடையும் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாட்டின் நம்பிக்கைக்கு உரிய அமைப்புகளில் ஒன்று வங்கிகள் என்ற நிலையில், அந்த வங்கிகளே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவது குறித்த விலாவாரியான ஆய்வுகள் நடத்தி எச் வினோத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும் இந்த படத்தை ஒவ்வொரு குடிமக்களும் பார்த்து வங்கிகள் மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம். அஜீத் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும் வசனமும் திரையரங்கைக் களிப்பிற்குள்ளாக்குகிறது. பணம் சம்மந்தமாக இன்னொரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இயக்குநர் H.விநோத் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்.

 

More News

'ரன் பேபி ரன்' படத்தின் ஒன்றரை நிமிட வீடியோ.. முதல்முறையாக காமெடி இல்லாத ஆர்ஜே பாலாஜி!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'எல்கேஜி' 'மூக்குத்தி அம்மன்' மற்றும் 'வீட்ல விசேஷம்'

பொங்கல் வின்னர், துணிவும் இல்லை, வாரிசும் இல்லை.. இந்த படம் தான்: நெட்டிசன்கள் அட்ராசிட்டி

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக நேற்று திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக்

அர்ஜூன் தாஸ் உடன் காதலா? சூப்பர் விளக்கம் அளித்த ஐஸ்வர்யா லட்சுமி!

நேற்று அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். 

வெளியே விக்ரமனை பற்றிய வீடியோ.. உள்ளே விளக்கும் தனலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இந்த சீசனில் எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ள நிலையில் தனலட்சுமி தான் வெளியே இந்த நிகழ்ச்சியை பார்த்த வீடியோ குறித்து விக்ரமனிடம்