close
Choose your channels

'ரன் பேபி ரன்' படத்தின் ஒன்றரை நிமிட வீடியோ.. முதல்முறையாக காமெடி இல்லாத ஆர்ஜே பாலாஜி!

Thursday, January 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’எல்கேஜி’ ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’வீட்ல விசேஷம்’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் ’ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜியான் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுங்க இந்த படத்தின் ஒன்றரை நிமிடம் வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வருகிறது.

இதில் உள்ள காட்சிகளில் இருந்து இந்த படம் முழுக்க முழுக்க ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது என்பதும், ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரை சுற்றி தான் கதை பின்னப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. மேலும் முதல் முறையாக ஆர்.ஜே பாலாஜி காமெடி இல்லாமல் ஒரு சீரியசான கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் புரிய வருகிறது.

சாம் சிஎஸ் இசையில் யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தில் ’ஜெய் பீம்’ படத்தில் நடித்த தமிழ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ராதிகா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.