close
Choose your channels

பொங்கல் வின்னர், துணிவும் இல்லை, வாரிசும் இல்லை.. இந்த படம் தான்: நெட்டிசன்கள் அட்ராசிட்டி

Thursday, January 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக நேற்று திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றன என்பதும் கிட்டத்தட்ட இரண்டு படங்களும் முதல் நாளில் நல்ல வசூல் செய்துள்ளன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்,

இந்த நிலையில் இன்று பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகிய ’வீரசிம்ஹ ரெட்டி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதாகவும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் மாஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாம இந்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணன் ஒரு காலில் காரை எட்டி உதைக்க, அந்த கார் பல அடி தூரம் பின்னால் சென்ற காட்சியின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பொங்கல் வின்னர் ’வீரசிம்ஹ ரெட்டி’ என அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் முதல் நாளில் மிகப்பெரிய வசூலையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.