close
Choose your channels

ஜூனியர் என்.டி.ஆர் அடுத்த படத்தில் வில்லன் பிரபல தமிழ் ஹீரோவா?

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி உள்பட பிரபல நடிகர்கள் ஹீரோக்களாக மட்டுமின்றி வில்லன்களாகவும் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஜூனியர் என்டிஆர் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படம் ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நடித்த ’ஆச்சார்யா’ படத்தை அடுத்து கொரட்டாலா சிவா இந்த படத்தை அதிரடி ஆக்சன் படமாக உருவாக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தமிழ் ஹீரோ சியான் விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாலிவுட்டிலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos