இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் திரைப்பட ஹீரோ!

  • IndiaGlitz, [Wednesday,March 02 2022]

தமிழ் திரைப்பட ஹீரோக்களில் ஒருவர் தனது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன்பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டம், உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நகுலுக்கு அகிரா என்ற பெண் குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக நகுல் அறிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் நகுல், ‘எரியும் கண்ணாடி’ மற்றும் ’வாஸ்கோடகாமா’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்பதும் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

வேட்டியை கட்டினா நான்தாண்டா ஜட்ஜ்: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டிரைலர்

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

சூர்யாவுக்கு புதிய பட்டம் வழங்கிய சத்யராஜ்: என்ன பட்டம் தெரியுமா?

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனுக்கு உலக நாயகன், விஜய்க்கு தளபதி, அஜித்துக்கு தல என மாஸ் நடிகர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவுக்கும் ஒரு படத்தை

'டான்' ரிலீஸ் தேதி இதுதான்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதே தேதியில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் திரைப்படமும் ரிலீஸ்

சிவராத்திரி தினத்தில் 'பீஸ்ட்' நாயகி என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 18 மில்லியன் ஃபாலோயர்களை