close
Choose your channels

சூர்யாவுக்கு புதிய பட்டம் வழங்கிய சத்யராஜ்: என்ன பட்டம் தெரியுமா?

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனுக்கு உலக நாயகன், விஜய்க்கு தளபதி, அஜித்துக்கு தல என மாஸ் நடிகர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவுக்கும் ஒரு படத்தை நடிகர் சத்யராஜ் வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் சத்யராஜ், ‘எங்க வீட்டு பிள்ளை சூர்யாவுக்கு ’புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்திலிருந்து சூர்யாக்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்துடன் டைட்டில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.