close
Choose your channels

வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இணைந்த முன்னாள் தமிழக எம்.எல்.ஏ!

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றி மாறனிடம் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உதவி இயக்குனராக இணைந்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது .

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இதன் பின்னர் அவர் சூர்யா நடிக்கவிருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் தெரிந்தது .

இந்த நிலையில் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் இணைந்துள்ளார். இதுகுறித்து கருணாஸ் கூறியிருப்பதாவது:

கிராமிய கானா பாடகராக என் கலைவாழ்வைத் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய் மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு என் நன்றி.

தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிவதில் பெருமை கொள்கிறேன். போலி வியாபரா அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பி இருக்கிறேன். எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடி வாசலே வாசல் திறந்துவிட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment