close
Choose your channels

நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அரசியல்வாதியின் மனைவி..!

Saturday, February 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் அரசியல்வாதியின் மனைவி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பல அரசியல்வாதிகளும், கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வரும் நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் ’உங்கள் புதிய பயணத்தை நீங்கள் தொடங்க எனது வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் போல் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார் நடிகை ராதிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.