close
Choose your channels

'D50' படத்தில் தனுஷ் கேரக்டர் பெயர் இதுவா? செம்ம மாஸாக இருக்கும் போல் தெரிகிறதே...!

Saturday, February 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ’D50’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் வடசென்னை பின்னணியாக கொண்ட கதையம்சம் என்றும் இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ராயன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் ’காத்தவராயன்’ என்று கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ள நிலையில் கேரக்டர் பெயரே மாஸ் ஆக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் ஸ்டில்கள் கசிந்துள்ள நிலையில் அதில் மொட்டை தலையுடன் தனுஷ் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். தற்போது கேரக்டர் பெயரும் கசிந்துள்ளதை அடுத்து இன்னும் சில விவரங்களை படக்குழுவினர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’D50’ படத்தை அடுத்து தனுஷ் இன்னொரு திரைப்படத்தையும் ஒருபக்கம் இயக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.