close
Choose your channels

இரண்டே மாதத்தில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியல்.. பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்..!

Friday, December 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி மாரிமுத்து நடித்துக் கொண்டிருந்தபோது 'எதிர்நீச்சல்' சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இரண்டு இடங்களில் இருந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த 'சிங்கபெண்ணே' என்ற சீரியல் முதல் இடத்தை தட்டி தூக்கியுள்ளது. இந்த நிலையில் 'எதிர்நீச்சல்' சீரியல் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை 'சிங்கப்பெண்ணே' என்ற சீரியல் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ஆனந்தி என்ற கேரக்டருக்கு ரசிகர்கள் பட்டாலும் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கட்டு

இரண்டாவது இடத்தை தொடர்ந்து 'கயல்' சீரியல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் 'சுந்தரி' சீரியல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

ஜி மாரிமுத்து இருந்தபோது முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்த 'எதிர்நீச்சல்' தற்போது வேல ராமமூர்த்தி வந்த பிறகு விறுவிறுப்பு குறைந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாவது இடத்தில் 'வானத்தைப்போல' சீரியல் இடம் பெற்றுள்ளது என்பதும் ஆறாவது இடத்தில் 'இனியா' ஏழாவது இடத்தில் 'ஆனந்த ராகம்' சீரியல்கள் இடம் பெற்றுள்ளன. எட்டாவது இடத்தில் 'பாக்கியலட்சுமி' சீரியல் உள்ள நிலையில் ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியில் 'சிறகடிக்க ஆசை' உள்ளது. சுருதி மற்றும் ரவி மீண்டும் அண்ணாமலை வீட்டிற்கு வந்த பிறகு ஏற்படும் குழப்பங்கள் அடுத்து இந்த சீரியலில் எப்போது வேண்டுமானாலும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி ஆர் பி ரேட்டிங்கில் பத்தாவது இடத்தில் 'ஆகா கல்யாணம்' உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment