தமிழிசை, எச்.ராஜா விக்கிபீடியா பக்கத்தில் கைவரிசை காட்டிய குசும்பர்கள்

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

பிரபலங்களின் விவரங்களை அறியும் இணையதளம் விக்கிபீடியா என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த இணையதளத்தில் யாருடைய பிரபலத்தின் பக்கங்களிலும் யார் வேண்டுமானாலும் எடிட் செய்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்யலாம். அந்த தகவல்கள் தவறு என்று தெரிந்தால் விக்கிபீடியா அதை நீக்கிவிடும்

இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாஜக பிரமுகர்களான தமிழிசை செளந்திரராஜன் மற்றும் எச்.ராஜா அவர்களின் விக்கிபீடியா பக்கங்களில் சில குசும்பர்கள் புகுந்து விளையாடியுள்ளனர்.

தமிழிசையின் பெயரை டுமிழிசை என்று மாற்றியதோடு, அவர் பாஜகவின் அடிமை என்றும் பிறந்ததில் இருந்தே அவர் தலைசீவாத பரட்டை தலையை உடையவர் என்றும், இவர் குமரிமுத்துவின் மகள் என்றும் சில குசும்பர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் எச்.ராஜாவின் விக்கிபீடியா பக்கத்தில் பாஜகவை சேர்ந்த இவர் மோடியின் வாழ்க்கைத்துணை என்றும், இவரது தந்தை பெயர் ஹரிஹர சர்மா என்றும், இவர் கடந்த 22ஆம் தேதி காலமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அனேகமாக இந்த விபரங்களை விக்கிபீடியா விரைவில் டெலிட் செய்துவிடும், இருப்பினும் தமிழிசை, எச்.ராஜாவை பிடிக்காதவர்கள் இந்த குசும்பர்களின் சேட்டையை ரசித்து வருகின்றனர்.

More News

விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை? பின்னணி என்ன?

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்

தமிழகத்தில் பாஜகவுக்கு என இருந்த ஒருசில ஓட்டுக்களையும் தமிழிசை செளந்தரராஜனும், எச்.ராஜாவும் 'மெர்சல்' விஷயத்தில் தேவையில்லாமல் வாயை கொடுத்து இழந்துவிட்டனர். 

'சாமி 2': த்ரிஷா எடுத்துள்ள அதிரடி, அதிர்ச்சி முடிவு

விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாகிய 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'மெர்சல்' படத்தின் மிரட்டலான 5 நாள் வசூல் விபரம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மெர்சலான சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த விபரங்களை காலையில் பார்த்தோம். தற்போது இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்

இன்று காலை கந்துவட்டியின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது