மூன்று நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா சென்ற 'தமிழ்ப்படம் 2'

  • IndiaGlitz, [Tuesday,July 10 2018]

சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள சில திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த படம் 63 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும், அனைத்து திரையரங்குகளுக்கும் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கேடிஎம் கிளியரன்ஸ் வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவரும் பல திரைப்படங்களின் கேடிஎம் கிளியரன்ஸ் கடைசி நிமிடத்தில் வெளிவந்து டென்ஷனை உருவாக்கி வரும் நிலையில் இதுபோன்று முன்கூட்டியே சில நாட்களுக்கு முன் கிளியரன்ஸ் தருவதை அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட ஒருசில முக்கிய நகரங்களில் ரிலீஸ் தேதி அன்று காலை சிறப்பு காட்சி திரையிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்குக் மட்டுமே காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கும் சிறப்பு காட்சி திரையிடப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

இன்னும் ஒரே ஒரு சிறுவன்: குகை மீட்பு பணியில் உள்ளவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். குகைக்குள் இவர்கள் சிக்கிய நேரத்தில்

சர்கார் விவகாரம்: அன்புமணிக்கு சவால் விடுத்த சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் டைட்டில் 'மாநாடு' என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

'சர்கார்' விஜய் கெட்டப்பை லீக் செய்த வரலட்சுமி

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த சர்ச்சை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னொரு புறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது

ஐஸ்வர்யாராய் படத்தின் புரமோஷனில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் உலக அழகி ஐஸ்வர்யாராய் என்பது தெரிந்ததே

யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியலை விரட்டி விரட்டி அடிக்கும் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தினமும் அல்லது வாரம் ஒருமுறை வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிக்பாஸ் என்னதான் யோசித்து