close
Choose your channels

ஐஸ்வர்யாராய் படத்தின் புரமோஷனில் ரஜினிகாந்த்

Tuesday, July 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் உலக அழகி ஐஸ்வர்யாராய் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாராய் நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் ஒன்றின் புரமோஷனுக்கு படக்குழுவினர் ரஜினியை பயன்படுத்தியுள்ளனர்.

அனில்கபூருடன் ஐஸ்வர்யாராய் நடித்து வரும் திரைப்படம் Fanney khan. இந்த படத்தின் புரமோஷன் சமீபத்தில் மும்பையில் நடந்தபோது, இந்த படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யாராய், ராஜ்குமார் ராவ் மற்றும் அனில்கபூர் ஆகியோர் ரஜினியின் மாஸ்க்கை அணிந்திருந்தனர். இதில் இருந்து இந்த படத்திற்கும் ரஜினிக்கும் ஒரு கனெக்சன் இருப்பதாகவும் அதனை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் இதுகுறித்து இயக்குனர் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிகிறது.

இதற்கு முன்னரும் பாலிவுட்டில் ரஜினியின் பெயரை ஒருசில படங்களின் புரமோஷனுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.