'அஜித் 57' படத்தின் நீளமான ஷூட்டிங் பிளான்

  • IndiaGlitz, [Monday,July 25 2016]

தல அஜித் நடிக்கும் 57 வது படமான 'ஏகே 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் இந்த படத்தின் 40 நாள் படப்பிடிப்பில் அஜித், காஜல் அகர்வால், கருணாகரன், தம்பி ராமையா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் இரண்டாவது ஹீரோயினாக அக்சராஹாசன் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தின் வில்லன் யார் என்பதையும் சிறுத்தை சிவா உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச க்ரை த்ரில்லர் படமாக அமையவுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த பாடல்களையும் விரைவில் முடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குக்கூ' இயக்குனரின் 'ஜோக்கர்' சென்சார் தகவல்

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...

உயிர் நண்பருக்காக 'கபாலி' ஸ்பெஷல் காட்சி: ரஜினி திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளையதளபதி விஜய்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, மற்றும்...

தமிழில் மேலும் ஒரு 'நம்பர்' படம்

தமிழ் திரையுலகில் ஏற்கனவே 24, 144, 46ஓ உள்பட பல திரைப்படங்கள் நம்பர்களின் டைட்டிலில் வெளிவந்துள்ள நிலையில்...

விஜய் பாணியை வித்தியாசமாக மாற்றிய சந்தோஷ் நாராயணன்

இளையதளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வரும் நிலையில் ...