close
Choose your channels

தல தோனியின் 'எல்ஜிஎம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இணைந்து தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர் என்பதையும், இந்நிறுவனம் முதல்முதலாக தமிழில் ‘எல்ஜிஎம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது என்பதும் தெரிந்ததே.

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 28 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தல தோனியின் முதல் தமிழ் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.