'ஓம் ஃபினிஷாய நமஹா': தல தோனியை கொண்டாடும் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள்!

தல தோனி உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதும் பல இக்கட்டான போட்டிகளில் இந்திய அணிக்கும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சரி கடைசி நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித் தந்து உள்ளார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் கொஞ்சமும் பதட்டப்படாமல் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது 2 ரன்கள் மற்றும் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி என 16 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்ததோடு, மீண்டும் தான் ஒரு மிகச்சிறந்த ஃபினிஷர் என்று தல தோனி நிரூபித்துள்ளார். மேலும் போட்டி முடிந்ததும், எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாக இருந்தது அவரது மிகப்பெரிய மெச்சூரிட்டியை காட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தல தோனியின் நேற்றைய அதிரடி ஆட்டத்தை சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து வீரேந்திர சேவாக் தனது சமூக வலைத்தளத்தில், ‘எம்எஸ் தோனி ’ஓம் ஃபினிஷாய நமஹா’, என்ன ஒரு வெற்றி’ என்று பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இதுகுறித்து பதிவு செய்த போது, ‘இந்த தொடரில் மிகவும் எதிர்பார்த்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த வெற்றி. தோனி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார் .

மேலும் நேற்றைய போட்டி முடிந்ததும் மைதானத்துக்கு உள்ளே வந்த கேப்டன் ஜடேஜா, தல தோனியின் முன் தலை வணங்கி தனது நன்றியை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிவி முன் துள்ளி குதித்த நடிகர் சூரி: வைரல் வீடியோ

நடிகர் சூரி டிவி முன் துள்ளி குதித்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

சமூக வலைத்தளத்தில் இருந்து திடீரென விலகிய விஷ்ணு விஷால்: என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் திடீரென சமூகவலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தாவின் பாய்ஃபிரெண்ட் ஆக மாறிய கிரிக்கெட் வீரர்!

நடிகை சமந்தாவின் பாய் பிரண்டாக கிரிக்கெட் வீரர் மாறிய தகவல் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இன்று முதல் அந்த ஃபேமிலியில் சேர்ந்துவிட்டேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று முதல் அந்த குடும்பத்தில் சேர்ந்து விட்டேன் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

கவின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'பீஸ்ட்' நடிகை: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரைப்பட நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் கவின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்