close
Choose your channels

இன்று முதல் அந்த ஃபேமிலியில் சேர்ந்துவிட்டேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று முதல் அந்த குடும்பத்தில் சேர்ந்து விட்டேன் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடலை பிட்டாக வைத்திருப்பதில் வல்லவர் என்பதும் தினசரி அவர் ஜிம் சென்று உடற் பயிற்சிகள் செய்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது சமூக வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது உலகின் மிகச்சிறந்த பிட்னஸ் நிறுவனத்தின் ஃபேமிலியில் தான் இணைந்துள்ளதாகவும், இதனை அடுத்து தனக்கு இன்னும் அதிக ஆச்சரியமான அனுபவங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கிய நிலையில் அந்த ஆல்பத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். 'ஓ சாதிசால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.