close
Choose your channels

நடிகை சமந்தாவின் பாய்ஃபிரெண்ட் ஆக மாறிய கிரிக்கெட் வீரர்!

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவின் பாய் பிரண்டாக கிரிக்கெட் வீரர் மாறிய தகவல் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள படம் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் இந்த டிரைலருக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமந்தாவின் பாய் பிரண்டாக இந்த படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’டிப்பம் டப்பம்’ என்ற பாடலில் சமந்தாவின் பாய் பிரண்டாக ஸ்ரீசாந்த் நடித்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதை ரசிகர்கள் கண்டுபிடித்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos