விமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கிய தல தோனி!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து சென்னை அணியின் கேப்டன் தல தோனி தனது ஊருக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமான நேரம் கொஞ்சம் அதிகம் இருந்ததால் அதுவரை அவர் விமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கியுள்ளார். பின்னர் தான் தூங்கியபோது எடுத்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில், 'ஐபிஎல் நேரத்திற்கு பழகப்பட்ட பின்னர், காலை நேர விமானம் என்றால் இதுதான் நடக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஐபிஎல் போட்டிகள் சரியான நேரத்தில் முடிவதில்லை என கிட்டத்தட்ட அனைத்து அணிகளின் கேப்டன்களுமே கூறியுள்ள நிலையில் தோனியும் அதற்கு ஆதரவான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

விமான நிலையத்தில் தோனி தரையில் படுத்து தூங்கிய எளிமையை பாராட்டி ஆயிரக்கணக்கானோர் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தோனி விமான நிலையத்தில் தூங்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

ராஜூமுருகனின் 'ஜிப்ஸி' பட நடிகருக்கு திருமணம்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த திரைப்படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது

உண்மை ஒருநாள் வெளியே வரும்! 25 வருடங்கள் கழித்து தாயின் கொலையை கண்டுபிடித்த மகன்

புளோரிடாவை அடுத்த ஜாக்சன்வில்லி (Jacksonville) என்ற பகுதியில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தாயின் உடலை அவரது மகன் கண்டுபிடித்துள்ளார்.

அஜித்தை இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன்: போனிகபூர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் தர்பார்: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படமான 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.

திருமணம் செய்வதாக ஆணை ஏமாற்றிய ஆண்: மேட்ரிமோனியல் நூதன மோசடி

சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக பெண் தேடினார். இந்த நிலையில் ஒரு ஆன்லைன் மேட்ரிமோனியில் அவர் தனது பெயர்ரை பதிவு செய்துள்ளார்.