close
Choose your channels

அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் இணைவாரா பிரபல நடிகர்?

Tuesday, May 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்பட நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க சந்தானத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்-சிவா கூட்டணியில் உருவான 'வீரம்' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் மீண்டும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், மிலன் கலை இயக்குனராகவும், அனிருத் இசையமைக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.