close
Choose your channels

முத்தையாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. விஷால் உறுதி

Tuesday, May 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கியுள்ள 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால், ''சண்டக்கோழி' படம் போலவே 'மருது' படமும் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் என்னை கொண்டுபோய் சேர்க்கும் என்று கூறினார். மேலும் 'இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தினை கண்டிப்பாக எனது பட நிறுவனம் தான் தயாரிக்கும். அது யார் நடிப்பதாக இருந்தாலும் கவலையில்லை. நான் தான் தயாரிப்பேன். இதில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனக்கு முத்தையா மீதிருக்கும் நம்பிக்கைதான் இதற்குக் காரணம்' என்று கூறியுள்ளார்.

மேலும் நாயகி ஸ்ரீதிவ்யா குறித்து கூறியபோது 'மருது' படப்பிடிப்பில் வெள்ளையாக இருந்த ஒரே நபர் ஸ்ரீதிவ்யா மட்டும்தான் என்று குறிப்பிட்ட விஷால் இந்த படத்தில் சூரி காமெடியனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் 'மருது' படம் திருட்டு விசிடியாக வெளிவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.