close
Choose your channels

'தளபதி 66' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா? 

Tuesday, March 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஆனஸ்ட்ராஜ், மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிட்டிசன், கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், ஆயுத எழுத்து, ஏழாம் அறிவு, ஆதித்ய வர்மா ஆகிய தமிழ் படங்களிலும் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

’தளபதி 66’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.