'தளபதி 67' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்களா?

  • IndiaGlitz, [Sunday,May 23 2021]

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் விஜய்யின் 67வது படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ’தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் தமிழில் மட்டுமின்றி நேரடியாக தெலுங்கிலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிடும் திட்டம் இருப்பதால் இந்த படம் ஒரு பான் - இந்தியா படமாக அமையும் என்றும் கூறப்பட்டு வருகின்றன.

ஆனால் அதே நேரத்தில் விஜய் எப்போதுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த திரைப்படம் குறித்த ஆரம்ப கட்ட பணியை தொடங்குவார். அந்த வகையில் ‘தளபதி 66; படத்தின் படப்பிடிப்பை முடித்தபின்னர் தான் அவரது தரப்பில் இருந்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், அதுவரை வரும் தகவல்கள் எல்லாம் யூகத்தின் அடிப்படையில் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' கனியின் திருமண புகைப்படம்: இன்னும் அப்படியே இருக்காரே?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்து ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ஹாட்ஸ்டாரில் பலர் அந்த நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர்.

காதலை ஏற்காவிட்டால் தற்கொலை? ரசிகருக்கு 'விஸ்வாசம்' அனிகா சொன்ன பதில்!

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமான 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேஷ். இவர் ஏற்கனவே அஜீத்தின் 'என்னை அறிந்தால்'

இந்த நபரை யாராவது கண்டுபிடிச்சு தாங்க: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்!

சமூக வலைதளங்களில் சிலர் மிகவும் சிறப்பாக பாடிய பாடல்கள் வைரலாகும் நிலையில் அந்த பாடல்கள் இசை அமைப்பாளர்களின் கவனத்தை பெற்று அவர்களுக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்த

சன்னிலியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல: யாஷிகாவின் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொட்டும் என்றும், மிகப் பெரிய ஸ்டாராக மாறி விடலாம் என்றும் கமல்ஹாசன் உள்பட பலர் கூறுவது உண்டு.

சரியான செருப்படிக் கேள்வி: ரசிகரின் கேள்வியை பாராட்டிவிட்டு பதில் கூறிய பார்த்திபன்!

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியை சரியான செருப்படி கேள்வி என விமர்சனம் செய்து விட்டு அந்த கேள்விக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது