close
Choose your channels

காதலை ஏற்காவிட்டால் தற்கொலை? ரசிகருக்கு 'விஸ்வாசம்' அனிகா சொன்ன பதில்!

Sunday, May 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேஷ். இவர் ஏற்கனவே அஜீத்தின் ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் அவரது மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அனிகா சுரேந்திரன் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆன போதிலும் வயதுக்கு மீறிய கிளாமர் என்று ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய அனிகா சுரேந்திரன் ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். ’உங்களுடைய தீவிர ரசிகர் ஒருவர் உங்களை காதலிப்பதாக கூறி, நீங்கள் அந்த காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால் உங்கள்து பதில் என்னவாக இருக்கும்? என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து அனிகா, ‘உண்மையில் அப்படி ஒரு நிலைமை எனக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. காதலிப்பதாக சொல்லி எனக்கு ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. எனவே அதைப்பற்றி விட்டுவிடுங்கள், ஞாபகப்படுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளார். அனிதாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.