close
Choose your channels

'குக் வித் கோமாளி' கனியின் திருமண புகைப்படம்: இன்னும் அப்படியே இருக்காரே?

Sunday, May 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்து ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ஹாட்ஸ்டாரில் பலர் அந்த நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மக்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி குறித்த செய்திகள் மற்றும் பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது தெரிந்ததே. கனியும் தனது இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தினர் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவரது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ‘தீராத விளையாடு பிள்ளை’ உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திரு மற்றும் கனிக்கு நடந்த திருமணத்தின்போது எடுத்த இந்த புகைப்படம் தற்போது வைரலாகிறது. கனி திருமண தினத்தில் இருந்தது போன்றே இன்றும் இருக்கிறார் என்று பலர் தங்களை கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் கனியின் சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனியும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.