close
Choose your channels

லோகேஷின் 'தளபதி 67' படம் LCU படமா? ஆச்சரிய தகவல்!

Saturday, January 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சஞ்சய்தத், த்ரிஷா உள்பட பல பிரபலங்கள் இணைந்துள்ளதால் இந்த படம் இதுவரை இல்லாத மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி லோகேஷின் முந்தைய படமான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் LCU காட்சிகள் இருந்த நிலையில் ’தளபதி 67’ படத்திலும் LCU காட்சிகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் அவரது முந்தைய படத்தின் கேரக்டர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அனேகமாக ‘கைதி’ படத்தின் ’டில்லி’ கேரக்டர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை முடித்துவிட்டு உடனடியாக அவர் ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos