close
Choose your channels

'தளபதி 67' இந்த படத்தின் ரீமேக்கா.. உரிமையை லோகேஷ் வாங்கியதாக தகவல்!

Saturday, November 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ திரைப்படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் என்றும் அந்த படத்தின் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘தளபதி 67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் தினந்தோறும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படம் ’A History of Violence’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் ‘தளபதி 67’ என்றும் தமிழுக்கு ஏற்றவாறு இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் மாற்றி உள்ளதாகவும் இந்த படத்தின் ரீமேக் உரிமையையும் அவர் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல அமெரிக்க நடிகர் விக்கோ மோர்டென்சென் நடித்த இந்த படத்தின் கதை என்பது ’மனைவி மற்றும் குழந்தை என சாதாரண குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் ஹீரோ திடீரென ஒரு வன்முறையை நிகழ்வு ஒன்றில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் பிறகு அவர் அண்டர்வேல்ர்டு உலகில் நுழைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தை தமிழுக்காக சில மாற்றங்கள் செய்து அதில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் கேரக்டர்களையும் புகுத்தி ’தளபதி 67’ படமாக அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment