'தளபதி 67' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா? மீண்டும் இணையும் வெற்றிப்பட குழுவினர்?

தளபதி விஜய் நடித்து வரும் 66ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது. அதன்படி ’தளபதி 67’ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படத்தை முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ’தளபதி 67’ படத்திற்கான பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல ’தளபதி 67’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்றும், இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த லலித் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாருட இறுதியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .

எனவே விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் லலித் என ’மாஸ்டர்’ படத்தின் குழுவினர் மீண்டும் இணைவதால் ’தளபதி 67’ திரைப்படம் மாஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரூ.200 கோடி வசூலை தொட்டதா தளபதி விஜய்யின் 'பீஸ்ட்? 

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

சுதா கொங்கராவின் அடுத்த படத்தின் நாயகன் சூர்யாவா? சிம்புவா?

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க

ஷங்கர் படத்தின் மாஸ் அப்டேட்டை கொடுத்த ராம்சரண் தேஜா: வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

நடிகை குஷ்புவுக்கு என்ன ஆச்சு?  வைரலாகும் மருத்துவமனை புகைப்படங்கள்

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்த நாகசதன்யா!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை பிரிந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக ஊடகங்கள்