close
Choose your channels

'தளபதி 67' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா? மீண்டும் இணையும் வெற்றிப்பட குழுவினர்?

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 66ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது. அதன்படி ’தளபதி 67’ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படத்தை முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ’தளபதி 67’ படத்திற்கான பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல ’தளபதி 67’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்றும், இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த லலித் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாருட இறுதியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .

எனவே விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் லலித் என ’மாஸ்டர்’ படத்தின் குழுவினர் மீண்டும் இணைவதால் ’தளபதி 67’ திரைப்படம் மாஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.